இதழ்களாய் உதிர்ந்த ரசனைகள்
காடு,மலை,கடல்,பாட்டு,நாட்டியம்,சுழலும் சக்கரத்தின் வீரியம், குழந்தையின் சிரிப்பு, காதலியின் கண்கள், காதலன் உதடு , நல்ல சொல் , நலம் தரும் வாக்கு இப்படிக் கணக்கில் அடங்காமல் போகிறது ரசித்தவைகளின் எண்ணிக்கை.
நல்ல ரசனை நபருக்கு நபர் மனோநிலைக்கு மனோநிலை மாறுபடுகிறது
பிரதேசம்,இனம், மதம், மொழி, சாதி, கொள்கை,நம்பிக்கை இப்படிப் பல கூறுகள் ரசனையின் மீது செல்வாக்கு செலுத்துகின்றன.
ஆயினும் அனைத்தையும் கடந்து மனித மனம் அடிப்படையில் சிலவற்றை ரசிக்கிறது.
ரசனையின் மூர்ச்சை எங்கே இருக்கிறது? எப்போது அது மலர்கிறது? ரசிக்கவேண்டியவற்றை ரசிக்காமல் கூடப் போய்விடுகிறோம். அது ஏன்? காரணம் சொல்லமுடியாத விஷயங்கள் பல.
ஏன் காரணம் கண்டுபிடிக்கவேண்டும்?
என்ன பயன்?
ராமகிருஷ்ண பரமஹம்சர் சொன்னது தான் நினைவு வருகிறது.தோப்பில் பழம் தின்னப்போனவன் மரங்களை எண்ணிக்கொண்டிருந்தால் பழம் தின்ன முடியாது. எனது இந்தப்பதிவுகளில் நான் ரசித்தவை, இதழ் இதழாக உதிர்ந்த ரசனை யின் அனுபவங்களை மட்டுமே நான் பதிவு செய்ய விரும்புகிறேன்.
ரசித்தவற்றை மீண்டும் நினைவு கூர்ந்தால் நன்றாக இருக்கிறது. மகிழ்ச்சியாக உற்சாகமாக இருக்கிறது.

No comments:
Post a Comment