Wednesday 20 March 2013

சங்கிலிகள்
1
அந்த எக்ஸ்பிரஸ் அன்று நான்குமணி நேரம் தாமதமாக வந்தது.
அதற்காக வெட்கப்படுவது போல் ஜங்ஷனுக்கு வெளியே, அவுட்டரைத் தாண்டி நேரங்கழித்து வீட்டுக்கு வரும் தலை தொங்கிய பையன் மாதிரி,  தன் வேகத்தைக் குறைத்துக் கொண்டது.
மெதுவாக நகா்ந்து வந்து கேபினுக்கு அருகில் நின்றுவிட்டது.
ஜங்ஷனில் அது நிற்க வேண்டிய பிளாட்பாரத்தில் வேறொரு ரயில் நின்று கொண்டிருந்தது.
அதற்கு அடுத்தது, அடுத்தது என்று ஆறு பிளாட்பாரங்களிலும் கூட்ஸ் வண்டிகளும், ரயில்களும் காலி போகிகளும் நிரம்பி இருந்தன.
எனவே, வீட்டுக் கதவு அடைக்கப்பட்டிருப்பதைக் கண்ட பையனைப் போல், ஏமாற்றமும் ஆயாசமும் கலந்த பெருமூச்சோடு கேபின் அருகில் நின்றது.  பிளாட்பாரம் காலியாகும் வரை இப்படியே காத்திருக்க வேண்டியதுதான்.
பயணிகள் பெட்டி, படுக்கைகளைத் தூக்கி தகவருகே அடுக்கி; முண்டியடித்துக் கொண்டு இறங்க முஸ்தீபு செய்து கொண்டிருந்தனா்.
ஜன்னல் வழியாகக் குதித்து அவா்கள் தப்பி ஓடாததற்கு காரணம் வெளியே பெய்யும் மழையாக இருக்கலாம்.
அது கனமான அடைமழையல்ல: இருந்தாலும் பயணிகளுக்கு ரயில்வே இலாக்காவின் மீதுள்ள ஆத்திரத்தை நன்றாகக் கிளறக் கூடிய அளவு வலிமை வாய்ந்த மழை.
ரயில் தாமதமாக வரும்;  இறங்குகின்ற பிரயாணிகளைக் குளிப்பாட்டி விடலாம் என்று நினைத்தே காத்திருந்தது போன்ற மழை.
கனமாகப் பெய்த களைப்பிலேயே தாரை தாரையாக ஒரு சாவதானத்தோடு ஊற்றிக் கொண்டிருக்கும் மழை.
மழைப் படலத்தில், சற்றுத் தொலைவில், ஜங்ஷன் மங்கித் தெரிகிறது. விளக்கொளியும் எஞ்சின் புகையும், நீா் மங்கலும் கலந்ததால் ஒளிக்கோடுகளும் உருவங்களும் இணைந்து விலகி,  மங்கி, மின்னி ஜங்ஷனே ஒளி விந்தைபோல் தெரிகிறது.
ஓா் இரண்டாம் வகுப்புப் பெட்டியில் ஒரு பயணி ஜன்னல் வழியே கண நேரம், ஊதற்காற்றின் கொடுமையையும், சில்லென்று முகத்தில் தெறித்த மழையையும் பொருட்படுத்தாது வெளியே எட்டிப்பார்த்தார்.
“யோவ் ஜன்னலை மூடுங்கய்யா!” என்றொரு குரல் சள்ளென்று விழவே, நனைந்த தலையோடு அவா் தம் ரசனையை உள்ளுக்கிழுத்துக் கொண்டார்.
அந்த இரண்டாம் வகுப்புப் பெட்டியில், அந்த ஜன்னலுக்கு அருகில் எரிந்து விழுந்தவா் ஒரு போலீஸ்காரா். இரவு கண்விழித்த எரிச்சலில் அவா் கண்கள் சிவந்திருந்தன.
அவரது துப்பாக்கியும் தொப்பியும் எதிரிலிருந்த ‘பொ்த்’தின் மீது ஓய்வு பெற்றிருந்தன.
அவருக்கு வலப்புறம் சங்கிலி விலங்கு பூட்டிய கரங்களோடு அமா்ந்திருந்தான் சங்கிலிக்குப் பக்கத்தில், காவலுக்கு வந்த இன்னொரு போலீஸ்காரா் தூங்கி விழுந்து கொண்டிருந்தார்.
இந்த இரைச்சலில், இந்த ரயில்வே தாமதத்தில், இந்த சலிப்பில் அவா் தூங்கிக் கொண்டிருப்பது, முதல் போலீஸ்காரருக்கு அவதான் சித்திகளுள் ஒன்று போல் தோன்றிற்று; வயிற்றெரிச்சலாகவும் இருந்தது.
ஜன்னல் ஓரத்துப் போலீஸ்காரா், சட்டைப்பையைத் துழாவி ஒரு பீடியை எடுத்து அசுவாரஸ்யத்தோடு பற்ற வைத்தார்.
“வந்தது ரெண்டு அவா் லேட்டு, இந்த லெச்சணத்திலே அவுட்டரிலே வேற போட்டுட்டானா!  அப்படி இப்படி இளுத்துக்கிட்டு, விடிய காட்பாடி போய்ச் சோ்ந்தான்னா பரவாயில்லே” என்று அகால இரவில் காட்பாடியில் இறங்கிச் சங்கிலியைக் கொண்டு போய் தொரப்பாடியில் சோ்க்கப்படப் போகும் சிரமத்தை நினைத்துப் பேசினார் அவா்.
“என்னது காட்பாடிக்கு விடியக் காத்தாலியா? அப்ப ஊருக்கு எப்ப…. சோத்து வேளைக்கா?”  என்று எதிர் ஸீட்காரா் அங்கலாய்த்தார்.
கண்ணாடி ஜன்னல் இறக்கி விட்டிருந்ததால், வெளியே பெய்யும் மழையை மௌனமாகப் பார்த்துக் கொண்டிருந்தான் சங்கிலி.
நெடு நெடுவென்று வளா்ந்த காட்டுஜாதி மரத்தைப் போலிருந்தது அவளைப் பார்க்க. ஆளை அயரச் செய்யும் உயரம், ஆறரை இருக்கலாம். முழம் போடத் தூண்டும் பெரிய தோள்கள்.
கட்டில் கால் மாதிரி கனத்த புஜம். மார்பு விசாலம் கண்ணைக் கவ்விற்று; கூடுபாய்ந்த மார்புகள் கொண்ட ஒரு நோஞ்சான் யுகத்துக்குப் பரிகாரம் போலிருந்தது.
உருண்டு திரண்டிருந்த மணிக்கட்டில் கைவிலங்கு, குழந்தைக்குப் போட்ட காப்பு மாதிரி, அவள் வலிமையின் முன்னே பூஞ்சையாகத் தோன்றிற்று.
வலக்கை மணிக்கட்டில் விலங்கு மேலே ஒரு வெளிக்காப்பு, நாள்பட்டுக் கறுத்த வெள்ளி.
முப்பது வயது மதிக்கத்தக்கக் கூடிய பரந்த பெரிய முகம், ஏறுநெற்றி, செதுக்கினாற்போன்ற சதுர மோவாய் வலிமையின்பூர்த்தி போன்று நிமிர்ந்து நின்ற நீளநாசி.
அடா்ந்த புருவத்தின்கீழே அவனது கறுத்த தீட்சண்ணியமான கண்கள் எதிரே ஏறிட்டுப் பார்த்தன.
விளக்கொளி அவனது கண்களில் மின்னியது. சங்கிலியின் வலிமை அவனது புஜங்களிலோ, முன்னங்கைகளின் உரத்திலோ இல்லை; இந்த கண்களில் தான் இருக்கிறது என நினைக்கத் தோன்றிற்று.
கம்பீரமான விழிகள் அவை. ஆழ்ந்த நிதானம்; அச்சமறியாத அலட்சியம்; பலஹீனங்களுக்கு இரங்கும் பரிவு:  பற்றற்ற தனிமை.
அவன் மனம் விசாலமானது; தண்டிக்கக் கூடியது; மன்னிக்கக் கூடியது; பற்றற்றது என்று பளிச்சென்று புலப்படுத்திய பார்வை அது.
சங்கிலி பார்வையை ஜன்னல் பக்கம் திருப்பினான், ஒரு வினாடி நேரம் மழையை உற்று நோக்கிவிட்டு பக்கத்திலிருந்த போலீஸ்காரரைப் பார்த்து “கொஞ்சம் லெட்ரினுக்குப் போகணும்” என்றான்; அந்தக் குரல் தொய்வின்றி கணீரென்று ஒலித்தது.
பீடியை உறிஞ்சி புகையை வாய் நிறைய ஊதிய அந்த கான்ஸ்டபிள் “நீ வேறயா?” என்று மரியாதையோடு சலித்துக்கொண்டார்.
“ஊம்… ஊம்…நட” என்று மறுக்கமுடியாமல் எழுந்தார்.
முண்டியடித்துக் கொண்டிருக்கும் இந்தக் கூட்டத்தில் ஆஜானுபாகுவாக, ஒரு ஹொ்குலியத் தனித்துவத்தோடு சங்கிலி கான்ஸ்டபிளைப் பின் தொடா்ந்தான்.
ஸ்டேஷன் வருகின்ற இடப்புறக்கதவருகில் கூட்டம் நெறிந்தது வலப்புறக் கதவருகில் காணப்பட்ட லாவெட்ரிக்குள் சங்கிலி நுழைந்தான்.
சற்று நேரத்தில் விட்டுவிட்டு எஞ்சின் விசில் ஊதிற்று சலிப்போடு பீடியை உறிஞ்சிக் கொண்டே திரும்பிய கான்ஸ்டபிளுக்கு கையில் ஒரு பையோடு இறங்கத் தயாராக நிற்கும் ஓா் அப்பாவிக்கிழவி தென்பட்டாள்.
“ஏய் பையிலே என்ன?”
“ஒண்ணுமில்லீங்க சட்டி முட்டிதானுங்க” கிழவியின் குரல் நடுங்கிற்று.
“சட்டியா?” பையைத் தொட்டார் நெறு நெறுவென்று நெறிந்தது அரிசி.
“ஏய் கெய்வி. யாருக் கடுக்கா கொடுக்கிறே இது தான் சட்டியா?”
“டிக்கெட் வாங்கியிருக்காளா கேணங்க சார்” என்று ஒரு ஆலோசனை வெளிவந்தது.
“டிக்கெட் இருக்கா?”
கான்ஸ்டபிள் குரல் உயா்ந்தது. கிழவி உளறத் தொடங்கி விட்டாள்.
“எசமான், ஏளெப்பரதேசிங்க, மருமவ குளியாதிருக்கா. கஞ்சி காச்ச ஊரிலிருந்து எடுத்தாரன், டிக்கிட்டு வச்சிருக்கேணுங்க”
அந்த விசாரணை மும்முரத்தில் சங்கிலி லாவெட்ரிக் கதவைத் திறந்து கொண்டு வெளி வந்ததைக் கான்ஸ்டபிள் கவனிக்கவில்லை.
அவன் ஒரு நிமிஷம் நின்றதைக் கவனிக்கவில்லை; லாவெட்ரி ஓரத்துக் கதவை தனது விலங்கிட்ட கரங்களால் திறந்த வரையில் கவனிக்கவில்லை.
திடீரென்று சில்லென்று குளிர்ந்த காற்று வீசிற்று. மழைத் துளிகள் பறந்துவந்தன. உள்ளுணா்வு எச்சரித்தது. கான்ஸ்டபிள் திரும்பிப் பார்த்தார். பெட்டிக் கதவும் லாவெட்ரிக் கதவும் ஒரேயடியாகத் திறந்திருந்தன.
கான்ஸ்டபிள் சட்டென்று “யோவ் எழுநூத்தஞ்சு” என்று அந்தப் பெட்டியே அதிர்வதுபோல் கூச்சலிட்டுக் கொண்டு வேகமாக ரயில் பெட்டியிலிருந்து குதித்தார்.
சங்கிலி சற்றுத் தொலைவில் வேகமாக ஓடிக்கொண்டிருந்தான். கை விலங்கோடு அந்த வேகம் அசாத்தியம்தான்.
“டேய், டேய்…நில்லு…நில்லு” என்று மழையில் தண்டவாளங்களும் லைன் கம்பிகளும் இடற தடுமாறிக் கொண்டே ஓடினார் கான்ஸ்டபிள்.
அதற்குள் பெட்டியினுள் பரவிய கலவரத்தில் எழுப்பப்பட்ட 705, மூலையில் சாத்தி வைத்திருந்த ரைபிளைத் தூக்கிக் கொண்டு கீழே குதித்தார்.
சங்கிலி ரயில் தொடரோடு ஓடாமல் தண்டவாங்களைக் குறுக்கே தாவித் தாவிக் கடந்து கிழக்கே ஈட்டி வரிசைபோல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரும்புக் கிராதியை நோக்கி ஓடினான்.
மழை இடைவிடாது ஜலதாரையாகப் பொழிந்து கொண்டிருந்தது. பளீரென்று சர்ச் லைட் வெளிச்சம் கூட அந்த மழைத் தரையில் சற்று மங்கித் தெரிந்தது.
தனது சகாவை 705 வேகமாக ஓடி நெருங்கியபோது சங்கிலி மழை பெய்வதால் வழுக்கும் இரும்புக் கிராதியின் மீது மிகுந்த சாமர்த்தியத்தோடு ஏறும் முயற்சியில் தத்தளித்துக் கொண்டிருந்தான், சட்டென்று தாவி ஏறி,  இரண்டு ஈட்டிகளில் இடைப்பட்ட இடைவெளியில் ஒரு காலையும், அந்த கிராதி வரிசையின் விளிம்புச் சட்டத்தில் ஒரு காலையும் வைத்து, தனது விலங்கிட்டக் கரங்களால் விழுந்துவிடாமலிருக்க ஒரு ஈட்டியைப் பற்றிக்கொண்டே ஒருகணம் அவன் அந்த வரிசையின் மீது நின்றான்.
மழையும் சர்ச்லைட் வெளிச்சமும் கலந்த சூழ்நிலையில் சங்கிலியின் உருவம் அந்த இரும்புக் கிராதியின் மீது நிற்பது விசித்திரமாகத் தெரிந்தது.
705 லோட் செய்யப்பட்டிருந்த நமது ரைஃபிளின் ‘லாக்க’ரைத்தள்ளி, அவனது காலைக் குறிபார்த்து ‘டிரிக்கரை’ அழுத்தினார்.
அந்த குண்டு புறப்படுவதற்கு முன்பு சங்கிலி லாவகமாக கீழே குதித்து விட்டான். 705ன் தோட்டா அவனது தலைக்கு மேலே வெடித்துப் பறந்தது.
எதிரே வரைகோடு போல், மங்கிய மழையிருளில் ஏலகிரி தெரியும் திசையில் சங்கிலி ஓடினான்.
அது கோடியூருக்குப் போகும் பாதை. சங்கிலி தலைதெறிக்க வளைந்து ஓடினான்.
பின்னால் உறுமுகின்ற ரைபிளிடம் தப்பித்துக்கொண்டால், எதிரே சுதந்திரமான உலகம்! சிறிது நேரத்தில் மழைத் தாரையில்; அவன் உருவம் மங்கிவிட்டது.
சங்கிலி கையாண்ட அதே வழியைப் பின்பற்ற 705 எடுத்துக் கொண்ட முயற்சிகளை அவரது கனமான லாடமடித்த போலீஸ் பூட்ஸுகள் பரிகாசத்தோடு அவமதித்துவிட்டன.
இருவரும் சற்றுத் தொலைவில் தெரிந்த, மரப்பாலத்தை நோக்கி ஓடினார்கள். ரயில்வே ஊழியர்கள் ஏறுவதற்காக இணைக்கப்பட்டிருந்த படிக்கட்டில் அவசரமாகத் தாவி, சுற்றிக் கொண்டு, சங்கிலி போன சாலை முடிவுக்கு ஓடிவந்தார்கள்.
இடைவிடாது பெய்யும் மழை அவா்கள் தலையை நனைத்து முகத்தில் வழிந்தது. அடிக்கடி வீசும் சாரலில் கண் குருடாயிற்று. இருப்பினும் அவா்கள் வேகமாக ஓடி வந்தார்கள்.
சற்று நேரத்தில் போலீஸ் விசில் ஓசை மழையில் ஓய்ந்து அமைதியடைந்து விட்டிருந்த அந்த பகுதியில், பரவலாகக் கேட்கத் தொடங்கிற்று.
தெரு விளக்குகள் எரியும் அந்த கோடியூா்ச் சாலையில், சற்றுத் தொலைவிலேயே, போலீஸ் ஸ்டேஷன். வேகமாக ஓடிய கான்ஸ்டபிள்களில் ஒருவா், ஸ்டேஷனில் வெளியே சென்ட்ரி நின்று கொண்டிருந்த கான்ஸ்டபிள் ஒருவரிடம் குளறிக் குளறி விஷயத்தைத் தெரிவித்தார்.
அவா் உள்ளே சென்று இரண்டு கான்ஸ்டபிள்களை எழுப்பினார்.  நான்கு விசில்கள் அப்போது தேடத் தொடங்கின. திசைக்கொன்றாக அழுது அழுது கைவீசித் துழாவுவது போன்ற விசில்கள்.
இதற்குள் அந்த எக்ஸ்பிரஸ் தனது பிளாட்பாரம் காலியாகி விடவே, நீண்ட பெருமூச்சுடன் மெதுவாக நகரத் தொடங்கிற்று. அதன் நீராவிச் சீற்றம் காதைக் கிழித்துவிடுவதுபோல் கா்ணகடூரமாகக் கேட்கலாயிற்று.

சங்கிலிகள்-2

சங்கிலிகள் -1

சங்கிலிகள் வையவன்
முன்னுரை
“மனிதன் பிறக்கும்போது சுதந்திரமாகத்தான் பிறக்கிறான். ஆனால் பிறந்த பிறகு அவனுக்கு உலகில் எங்குமே சங்கிலிகள் தான்” என்றான் பிரெஞ்சுப் பேரறிஞன் ரூசோ. இது சமுதாய ஒப்பந்தம் என்ற அவனது தலைசிறந்த நூலின் தொடக்க வாக்கியம்.
சமூகம் தனிமனிதனைத் தன் வலுவான சங்கிலிகளால் இறுகக் கட்டிப் பிணைத்துவிடுகிறது. பிறந்தவன் இறக்கும் வரை சங்கிலிகளுக்கு ஓய்வில்லை. அவன் சந்திக்க வேண்டியவை -
எத்தனை கொடுமைகள்!  எத்தனை குரூரங்கள்!  எத்தனை எத்தனை வன்முறைகள்!
இந்த நாவலின் கதாநாயகப் பெயரே சங்கிலி. சமூகம் அவன் மேலும் பல சங்கிலிப் பிணைப்புக்களை ஏற்படுத்தியது.
அன்புச் சங்கிலி, பாசச் சங்கிலி, காதல் சங்கிலி, காமச் சங்கிலி. இத்துடன் கூட ஆதிக்க வெறியும், பணத்திமிரும் இணைந்து போட்ட ஆணவச் சங்கிலி வேறு அவனை எதிர்கொண்டது.
மென்மையான சங்கிலிகளிடமிருந்து அவன் விடுபட முடிந்தது.
ஆனால் நீதிக்கும் நியாயத்திற்கும் புறம்பான சமூகக் கொடுமைகள் அவனை சீறி எழ வைத்தன.
தனிமனிதனாக, அநாதையாக வாழ நோ்ந்தது அவன் விதி.
எனினும் கொடுமையின் மூலக் கூற்றோடு மோதும் பணியில் அவன் ஈடுபட்டுக்கொண்டே இருந்தான்.
சிறிது கூடத் தன்னலக் கலப்பற்ற அவனது ஆண்மைப் பெருமிதம், பெண்மையின் கௌரவத்தை எப்போதுமே போற்றி நின்றது.
வாய்ப்புக்கள் வந்தாலும் பெண்மையை மாசுபடுத்த அவன் மனம் விரும்பியதே இல்லை.
அவன் தான் இந்த நாவலானான்.
வெறும் கதை சொல்லி வாசகா் பொழுதைப் பாழாக்குவது ஒருபோதும் எனக்கு ஒவ்வாதது.
மனித உள்ளங்களின் அடியாழத்தில் உறங்கும் மேன்மைப் பண்புகளையும், பல நுட்பமான உணா்வின் அதிர்வுகளையும் உசுப்பி எழுப்பு! பதிவு செய்!
ஓர் இலக்கியப் படைப்பை வாசித்து முடித்த ஒரு வாசகரின் இதயவீணையில் மௌனமான உயர்வகை ராகங்களை உதிக்கச் செய்!
இதுதான் என் இலக்கியக் கொள்கை, கோட்பாடு, நடைமுறை, ஏன் தவமே கூட!
கடல் கடந்த மலேசியத் தமிழ் கூறு நல்லுலகம் ‘தமிழ்நேசன்’ இதழில் இதை வெளியிட்டு வாழ்த்தியது நூலாக்கினோர் பூரித்தார்கள். இனி தீா்ப்பு உங்கள் கையில்!

மிக்க அன்புடன்
சென்னை - 600 022 வையவன்

Thursday 17 January 2013

எதிரொலி அனுபவம்

எதிரொலி அனுபவம் 
நானும் சில நண்பர்களுமாய் வெள்ளக்குட்டைக்கு அருகில் உள்ள ஒரு குன்றின் மீது ஏறினோம்.பிற்பகல் நேரம்.சூரியன் சுடாத வெயில். 
கால்களோ தொடைகளோ வலிக்காத நடைப்பயணம். காட்டுப்பாதை.உச்சியை எட்டியபோது அதிக உயரத்தில் நின்றவன் நான் தான். 
நீலக்கூடாரமாக வியாபித்திருந்த வானத்தில் மேகம் மூடிய மெல்லிய ஒளியில் விரிந்திருந்தது வயல்வெளிப்பிரதேசம். அது தான் எனது சாம்ராஜ்யம் போலவும், அதை நான் பார்வையிட வந்த சக்கரவர்த்தி  போலவும் போயிற்று என் மனப்போக்கு. எனது ஆளுகைக்கு யாவும் உட்பட்டிருப்பது போலவும் அதன் மீது என் அன்பு பேரலையாய்ப் பரவியிருப்பது போலவும் ஒரு கற்பனை.
அந்தச் சமயத்தில் எங்கோ ஒரு பறவையின் குரல் எழ இரண்டு மூன்று கணங்களில் அதற்கொரு எதிரொலி வந்தது. கூர்ந்து கவனித்தேன் 
ஓர் ஒலி . அதற்கோர் எதிரொலி. ஏதோ ஒரு கேள்வியும் அதற்கு ஒரு பதிலும் போல் அவை தோற்றமளித்தன. 
பறவை எனக்குள் ஓர் உயிரின் உந்தலை  எழுப்பிற்று. நானும் பறவையாகிக் கூவ வேண்டும் என்று தோன்றியது.    'க்குவோ ' என்று கூவினேன் .ஒரு முறை. இருமுறை.
அடுத்த வினாடி நான் மனிதன் என்ற பழக்க ஞாபகம் மீண்டு விட்டது.
ஏன் பறவையாகக் கூவ வேண்டும்? 
ஒரு மனிதனாக நான் மிகவும் நேசிக்கிற ஒரு மனிதனை அழைக்கிற மாதிரி ஏன் கூவக்கூடாது?
  யார் அந்த நான் மிகவும் நேசிக்கிற மனிதன்?
மின்னல் போல் என் மனசுக்குள் என் கேள்விக்குப் பதில் வந்தது.
காக்கை குருவி எங்கள் ஜாதி நீள் கடலும் மலையும் எங்கள் கூட்டம் என்று ஈதர் வெள்ளமாகப் பரவிய பாரதி நினைவு வந்தது.
'பாரதீ' என்று கூப்பிட்டேன்.
ஒலி அலை அலையாக குன்றின் உச்சியில் இருந்து அடிவானத்திற்கு ஒரு நிமிடம் நீண்டது. 
காத்திருந்தேன்.
எதிரொலி வந்தது.
கூப்பிட்டாயா நண்பா என்று கேட்பது போல் .
 'பாரதீ' 
'பாரதீ'  
மெதுமெதுவாய் ஸ்வரம் அடங்கி அடங்கி ஒலி கரைந்து மௌனம் மீண்டது 
இரண்டு முறை அந்த அனுபவத்தில் திளைத்ததும் போதும் என்று தோன்றியது. 
'எத்தனை கோடி இன்பங்கள் வைத்தாய் இறைவா எங்கள் இறைவா?'
கடவுளோடு ஓர் உரையாடல் நடத்திய நிறைவு எனக்குள்.

இதழ்களாய் உதிர்ந்த ரசனைகள்

 இதழ்களாய்  உதிர்ந்த ரசனைகள் 
காடு,மலை,கடல்,பாட்டு,நாட்டியம்,சுழலும் சக்கரத்தின் வீரியம், குழந்தையின் சிரிப்பு, காதலியின் கண்கள், காதலன் உதடு , நல்ல சொல் , நலம் தரும் வாக்கு இப்படிக் கணக்கில் அடங்காமல் போகிறது ரசித்தவைகளின் எண்ணிக்கை.
நல்ல ரசனை நபருக்கு நபர் மனோநிலைக்கு மனோநிலை மாறுபடுகிறது
பிரதேசம்,இனம்,  மதம், மொழி, சாதி, கொள்கை,நம்பிக்கை இப்படிப்  பல கூறுகள் ரசனையின் மீது செல்வாக்கு செலுத்துகின்றன.
ஆயினும் அனைத்தையும் கடந்து மனித மனம் அடிப்படையில் சிலவற்றை ரசிக்கிறது.
ரசனையின் மூர்ச்சை எங்கே இருக்கிறது? எப்போது அது மலர்கிறது? ரசிக்கவேண்டியவற்றை ரசிக்காமல் கூடப் போய்விடுகிறோம். அது ஏன்? காரணம் சொல்லமுடியாத விஷயங்கள் பல.
ஏன் காரணம் கண்டுபிடிக்கவேண்டும்?
என்ன பயன்?
ராமகிருஷ்ண பரமஹம்சர் சொன்னது தான் நினைவு வருகிறது.தோப்பில் பழம் தின்னப்போனவன் மரங்களை எண்ணிக்கொண்டிருந்தால் பழம் தின்ன முடியாது. எனது இந்தப்பதிவுகளில் நான் ரசித்தவை, இதழ் இதழாக உதிர்ந்த ரசனை யின் அனுபவங்களை மட்டுமே நான் பதிவு செய்ய விரும்புகிறேன்.
ரசித்தவற்றை மீண்டும் நினைவு கூர்ந்தால் நன்றாக இருக்கிறது. மகிழ்ச்சியாக உற்சாகமாக இருக்கிறது.